வேலூர் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் இன்று காலை வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதற்கு முன்னதாக வாணியம்பாடி அடுத்த செக்குக்மேடு பகுதியில் உள்ள, திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் தேவராஜ் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
துரைமுருகன் வீட்டில் ரெய்டு: கண்டித்த மம்தா கட்சி! - திருணாமூல் காங்கிரஸ்
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தாவின் திருணாமுல் காங்கிரஸ் ட்வீட் செய்துள்ளது.
இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மேற்கு வங்க மாநில ஆளும் மம்தா பானர்ஜி கட்சியான திருணாமுல் காங்கிரசும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதில் மேற்கும் வங்கம், டெல்லி, உத்தர பிரதேசம், ஆந்திரா, பீகார் கர்நாடகாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பாஜகவிற்கு எதிராக உள்ள கட்சி நிர்வாகிகளை குறிவைத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். அந்தவகையில் இன்று தமிழ்நாட்டில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இதற்கு திருணாமுல் காங்கிரஸ் சார்பில் கண்டனத்தை தெரிப்பதாக ட்வீட் செய்யப்பட்டுள்ளது.