மக்களவைத் தேர்தலின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டுவரும்படி திருணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசிய மாநாடு உட்பட பல எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு எதிராக திருணாமுல் போராட்டம் - திருணாமுல் காங்கிரஸ் கட்சி
டெல்லி: திருணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு எதிராக கோஷமிட்டபடி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
ஆனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் நம்பகத்தன்மையுடன் இருப்பதாகக் கூறி அனைத்து குற்றச்சாட்டுகளையும் தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இந்நிலையில் இன்று நாடாளுமன்ற வளாகத்தின் உள்ள காந்தி சிலைக்கு முன் நின்றபடி திருணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக வாக்குச் சீட்டு முறையை திரும்பக் கொண்டுவர வேண்டும் என திருணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.