திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான மிமி சக்ரபோர்த்தி படப்பிடிப்பிற்காக லண்டன், இங்கிலாந்து நாடுகளுக்கு சென்றிருந்தார்.
அதனை முடித்துக் கொண்டு நேற்று காலை மேற்கு வங்கம் திரும்பிய அவர் கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தாமே முன்வந்து அடுத்த 14 நாள்கள் தம்மைத் தனிமைப்படுத்தி கொண்டு வீட்டில் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கப்போவதாக தெரிவித்ததாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.