தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாட்டை சுற்றிய விஷ நாகம் நிர்மலா சீதாராமன் - திரிணாமுல் தலைவர் காட்டம்! - மத்திய நிதியமைச்சர்

கொல்கத்தா : கால நாகினி கக்கும் விஷத்தைப் போல மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் தவறான பொருளாதார பார்வை நாட்டு மக்களைக் கொல்கிறது என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கல்யாண் பானர்ஜி விமர்சித்துள்ளார்.

நிர்மலா சீத்தாராமன் நாட்டை சுற்றிய கால நாகினி - திரிணாமுல் தலைவர் காட்டம்!
நிர்மலா சீத்தாராமன் நாட்டை சுற்றிய கால நாகினி - திரிணாமுல் தலைவர் காட்டம்!

By

Published : Jul 5, 2020, 6:43 PM IST

மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் பனிப்போர் நிலவி வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு போன்றவற்றில் தொடங்கிய இந்த கருத்து முரண்பாடு, கோவிட்-19 நெருக்கடி காலத்தில் உச்சத்தை அடைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக நாட்டு மக்கள் நாள்தோறும் சாகிறார்களென திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கல்யாண் பானர்ஜி நேற்று (ஜூலை 4) ஆவேசமாக சாடினார்.

பாங்குரா என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இதுபற்றி பேசிய அவர், 'கால நாகினி (விஷ பாம்பு) கடித்தால் மக்கள் எப்படி இறக்கிறார்களோ அதுபோல நிர்மலா சீதாராமனின் தவறான பொருளாதார திட்டங்கள் காரணமாக மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் அவர் அழித்துவிட்டார். நாட்டின் இன்றைய வீழ்ச்சிக்கு காரணமான அவர் வெட்கப்பட வேண்டும். அவர் பதவியில் இருந்து விலக வேண்டும். உலகமே இதுவரை அவரை போன்ற மோசமான நிதியமைச்சரை கண்டதில்லை" என தெரிவித்தார்.

கல்யாண் பானர்ஜியின் சர்ச்சைக்குரிய பேச்சு மேற்கு வங்கத்தில் பெரும் அதிர்வலையை உருவாக்கியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details