மேற்குவங்க மாநிலம் செரம்பூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 40க்கும் மேற்பட்ட திருணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாக கூறினார். இதற்கு எதிர்கட்சிகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
மோடியின் வேட்பு மனுவை நிராகரிக்க திருணாமுல் வலியுறுத்தல் - Modi
டெல்லி: குதிரை பேரத்தில் ஈடுபட்டதற்காக, பிரதமர் நரேந்திர மோடியின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி, தேர்தல் ஆணையத்துக்கு திருணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
இந்த விவகாரத்தை பற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்படும் என, திருணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரைன் தெரிவித்திருந்தார். அந்த வகையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி பரப்புரை மேற்கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி மீது தேர்தல் ஆணையத்தில் திருணாமுல் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய கடிதத்தில், ஜனநாயகத்துக்கு எதிராக குதிரை பேரத்தில் ஈடுபட்ட மோடியின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.