குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெற்றுவந்த போராட்டத்தில் திடீரென்று வன்முறை வெடித்தது. இந்தக் கலவரத்தில் இதுவரை 46 பேர் உயிரிழந்தனர், மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதைக் கண்டித்து இன்று நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை அருகே திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்களில் கறுப்பு ரிப்பனை கட்டி, இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.