தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'தைரியமிருந்தால் பெயரை சொல்லுங்கள்', சுவேந்து அதிகாரிக்கு திரிணாமுல் காங்கிரஸ் சவால்! - அமித் ஷா

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி திரிணாமுல் காங்கிரஸ் மீதும் மம்தா பானர்ஜி மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது மம்தா பானர்ஜியின் மருமகன் (பைபோ) கை கட்சியில் ஓங்குகிறது என்றும் பெயரை குறிப்பிடாமல் தெரிவித்தார். இந்நிலையில் தைரியமிருந்தால் பெயரை சொல்லுங்கள் என திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் சுவேந்து அதிகாரிக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது.

TMC challenges Adhikari Trinamool Congress (TMC) Suvendu Adhikari joins BJP tmc leader Kalyan Banerjee பைபோ சுவேந்து அதிகாரிக்கு திரிணாமுல் காங்கிரஸ் சவால் சுவேந்து அதிகாரி திரிணாமுல் காங்கிரஸ் அமித் ஷா மம்தா பானர்ஜி
TMC challenges Adhikari Trinamool Congress (TMC) Suvendu Adhikari joins BJP tmc leader Kalyan Banerjee பைபோ சுவேந்து அதிகாரிக்கு திரிணாமுல் காங்கிரஸ் சவால் சுவேந்து அதிகாரி திரிணாமுல் காங்கிரஸ் அமித் ஷா மம்தா பானர்ஜி

By

Published : Dec 20, 2020, 10:51 PM IST

கொல்கத்தா:மம்தா பானர்ஜியின் குடும்ப உறுப்பினருக்கு முதலமைச்சர் ஆசை உள்ளது என திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து சுவேந்து அதிகாரி குற்றஞ்சாட்டை முன்வைத்துள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவர் மம்தா பானர்ஜியின் குடும்பத்தில் இருந்து முதலமைச்சர் பதவிக்கு எந்த ஆர்வமும் இல்லை என்று கட்சியின் மூத்த தலைவர் கல்யாண் பானர்ஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திரிணாமுல் காங்கிரஸில் இருந்து (பைபோ) மருமகனை அகற்றுவதற்காக மிட்னாபூரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடத்திய பேரணியில் இணைந்ததாக சுவேந்து அதிகாரி தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் கல்யாண் பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், “உங்களுக்கு (சுவேந்த் அதிகாரி) தைரியம் இல்லை, எனவே நீங்கள் யாரைக் குறிக்கிறீர்கள் என்று பெயரிட முடியாது.

மம்தா பானர்ஜியின் குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் முதல்வர் பதவியை ஆக்கிரமிக்க எந்த விருப்பமும் இல்லை. எங்கள் கட்சியில் எவருக்கும் குடும்பம் சார்ந்த தனிப்பட்ட ஆர்வம் இல்லை. எல்லோரும் எங்கள் தலைவர் மம்தா பானர்ஜியின் உத்தரவின் பேரில் மக்கள் மற்றும் மக்களுக்காக கட்சியில் இணைந்துள்ளனர்.

சுவேந்த் அதிகாரி, அமித் ஷா மற்றும் கைலாஷ் விஜயவர்கியா உள்ளிட்ட பிற பாஜக தலைவர்கள் கடந்த காலங்களில் பெரும்பாலும் "பைபோ" (வங்காளத்தில் மருமகன்) என்ற வார்த்தையை பானர்ஜியின் மருமகன் மற்றும் கட்சி இளைஞர் பிரிவு தலைவர் அபிஷேக் பானர்ஜியைக் குறிப்பிடுகின்றனர்.

இதற்கு முதலமைச்சர் கடும் கண்டனத்தை பதிவிட்டுள்ளார். ஆகவே, தனிப்பட்ட தாக்குதல்களைச் செய்யாதீர்கள். திரிணாமுல் காங்கிரஸ் எந்தவொரு குடும்பத்தினரால் இயக்கப்படுவதோ அல்லது அதன் நலன்களால் நடத்தப்படுவதோ இல்லை. இதுபோன்ற மலிவான தாக்குதல்களை நடத்துபவர்களின் விஷயத்தில் பரிவார் தந்திரங்கள் உள்ளன.

அமித் ஷாவை விவசாயிகளின் நண்பர் என்று அழைக்க முடியாது. இது எல்லாம் போலியானது. ஒரு விவசாயியின் வீட்டில் மதிய உணவு சாப்பிடுவதன் மூலம் நீங்கள் விவசாயிகளின் நண்பராக மாற முடியாது. அமித் ஷா போன்றவர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அச்சுறுத்தல்களை கொடுக்க வெவ்வேறு நிறுவனங்களைப் பயன்படுத்துகின்றனர்.

பாஜகவின் மிட்னாபூர் பேரணியில் அதிக மக்கள் கூட்டம் இல்லை, சுவேந்த் அதிகாரியின் கோட்டைகளாகக் கூறப்படும் நந்திகிராம் மற்றும் கெஜூரியிலிருந்து அதிகமான மக்கள் கலந்து கொள்ளவில்லை.

நீங்கள் மேடையில் அமித் ஷாவின் கால்களைத் தொட்டுள்ளீர்கள். கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் இதேபோல் மம்தா பானர்ஜியின் கால்களைத் தொட்டீர்கள். கடந்த 10 ஆண்டுகளாக நடித்ததுபோல் தற்போதும் நாடக நடிப்புதான் உள்ளது.

மேலும், உங்களுக்கு (சுவேந்து அதிகாரி) மரியாதை வேண்டும் என்று சொன்னீர்கள். உங்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சரவை கொடுக்கப்பட்டது, நீங்கள் இரண்டு முறை எம்.பி. ஆனீர்கள். கட்சியில் பல்வேறு பிரிவுகளுக்கு தலைவராக நியமிக்கப்பட்டீர்கள். பல மாவட்டங்களில் கட்சி பார்வையாளராக இருந்தீர்கள். அது போதாதா? இன்னும் உங்களுக்கு என்ன மாதிரியான மரியாதை வேண்டும்? என்றும் கேள்வியெழுப்பினார்.

இதையும் படிங்க: கேரளத்தில் மக்களை இன ரீதியாக பிரிப்பதா? பினராயி விஜயனுக்கு காங்கிரஸ் கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details