தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘கெஜ்ரிவால் மன்னிப்புக் கேட்க வேண்டும்’ - டெல்லி பாஜக நோட்டீஸ் - பாஜக

டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், அக்கட்சியின் எம்எல்ஏ ஆகியோருக்கு டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

manoj

By

Published : Sep 28, 2019, 1:05 PM IST

என்.ஆர்.சி. (NRC) எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி எம்எல்ஏ சவுரப் பரத்வாஜ் ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர். இந்தக் கருத்து வன்முறையைத் தூண்டும்விதமாக இருப்பதாகக் கூறி டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, கெஜ்ரிவால் மற்றும் சவுரப் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்த நோட்டீஸில், அரவிந்த் கெஜ்ரிவால், சவுரப் பரத்வாஜ் ஆகியோர் கருத்துகள் சட்டப்படி குற்றமாகும் என்றும், இருவரும் அடுத்த இரண்டு நாள்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்கலாமே:'இந்திரா காந்தியை போல நானும் கொல்லப்படலாம்' - அரவிந்த் கெஜ்ரிவால்

ABOUT THE AUTHOR

...view details