தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருக்குறள் ரெபரென்ஸ்...கார்ப்பரேட்டுகளுக்கான நாடாகும்" - திருச்சி சிவா விமர்சனம், கடும் அமளியில் மாநிலங்களவை! - மாநிலங்களவையில் அமலி

டெல்லி: மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள விவசாயிகள் மசோதாவை கடுமையாக விமர்சித்துப் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் இந்தியாவை கார்ப்பரேட் நாடு என்றுதான் அழைக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

Tiruchi Siva MP in Parliament
Tiruchi Siva MP in Parliament

By

Published : Sep 20, 2020, 2:23 PM IST

மத்திய அரசு தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அத்தியாவசிய பொருள்கள் மசோதா 2020, விவசாயிகள் உற்பத்தி வர்த்தக மசோதா உள்ளிட்ட மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால் விவசாயிகளுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச வருமானம்கூட பாதிக்கப்படும் என்று பஞ்சாப், ஹாரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த சில நாள்களுக்கு முன் விவசாயிகள் மசோதா 2020க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் மத்திய அமைச்சர் பதவியை ஹர்சிம்ரத் கெளர் பாதல் ராஜினாமா செய்தார்.

இந்த விவசாயிகள் மசோதா தொடர்பான விவதாம் இன்று மாநிலங்களவையில் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, "இந்த மசோதா விவசாயிகளின் நலன்களை காக்கும் விதமாக இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், உண்மையில் இந்த மசோதா விவசாயிகளை விற்கும் விதமாக உள்ளது.

கோவிட் 19 காரணமாக ஏற்பட்டுள்ள இந்த நிலையை பயன்படுத்தி, மத்திய அரசு பல்வேறு மசோதாக்களை அவசர கதியில் நிறைவேற்றுகிறது. நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கும் தேர்வு குழுவிற்கும் அனுப்பமாலேயே மத்திய அரசு பெரும்பாலான மசோதாக்களை நிறைவேற்றுகிறது. அவசர கதியில் மத்திய அரசு ஏன் இந்த மசாதோக்களை நிறைவேற்றுகிறது என்ற கேள்வியும் எழுகிறது.

திருவள்ளுவர் தனது குரலில்,

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்.

என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது விவசாயிகள் மட்டுமே தற்சாற்புடன் வாழக்கூடியவர்கள். மற்றவர்கள் அனைவரும் அவர்களை சார்ந்தே இருப்பவர்கள் என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். ஆனால், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் இந்த நிலை தலைகீழாக மாறிவிடும். விவசாயிகள் பிறரை நம்பியிருக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

நாடு முழுவதும் விவசாயிகள் அரை நிர்வாணமாக போராடியபோது, மத்திய அரசு அவர்கள் கோரிக்கைகளை காது கொடுத்துக்கூட கேட்கவில்லை. ஆனால், இப்போது ஏதோ அவர்களுக்கு உதவுவது போல மத்திய அரசு காட்டிக்கொள்கிறது.

இடைத்தரகர்களிடம் இருந்து விவசாயிகளை விடுவிப்பதற்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதாக மத்திய அரசு கூறுகிறது. அப்படியென்றால் அதற்கு தேவையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். ஆனால், இருக்கும் கட்டுப்பாடுகளையும் தளர்த்தி, விவசாயிகளை கார்ப்பரேட்டுகளின் கைகளுக்கு மத்திய அரசு தள்ளிவிடுகிறது.

திருச்சி சிவா விமர்சனம் - கடும் அமளியில் மாநிலங்களவை

இதுமட்டுமின்றி விவசாயம் என்பது மாநில பட்டியலில் உள்ள ஒன்று. எனவே, இது போன்ற ஒரு சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. இது மாநில அரசின் உரிமைகள் மீது தொடுக்கப்படும் மற்றொரு தாக்குதல்.

இதுவரை நம் நாட்டை விவசாய நாடு என்று அழைத்தோம். ஆனால், இந்த அரசிற்கு பின் இதை கார்ப்பரேட் நாடு என்றே அழைக்க முடியும்" என்றார்.

இதன் பின் விவசாய மசோதாக்களை கிழித்து எரிந்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுப்பட்டதால் மாநிலங்களவை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் விலை ரூ. 1150... ஆனால்? - ப. சிதம்பரம் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details