ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய முக்கியமான சுகந்திர போராட்ட வீரர்களில் ஒருவர் திப்பு சுல்தான். இவரின் நினைவைப் போற்றும் விதமாக சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, திப்புவின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, திப்பு சுல்தான் சுகந்திர போராட்ட வீரர் அல்ல எனக்கூறி பாஜக போராட்டத்தில் குதித்தது. இந்த விவகாரம் பல காலமாக சர்ச்சையை கிளப்பி வந்தது. கர்நாடகா முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பாபதவி ஏற்றதைத் தொடர்ந்து, அரசு விழா பட்டியலில் இருந்து திப்பு ஜெயந்தியை நீக்கியது.
எடியூரப்பாவின் செய்தியாளர் சந்திப்பு இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த எடியூரப்பா, "திப்பு சுல்தான் ஜெயந்தியை கொண்டாட யாரையும் அனுமதிக்க மாட்டோம். திப்பு சுல்தானை சுதந்திர போராட்ட வீரராக கொண்டாடுபவர்களிடமிருந்து நான் வேறுபடுகிறேன். அவர் பற்றிய குறிப்புகளை பாடத் திட்டங்களில் இருந்து நீக்க முயற்சித்து வருகிறேன்" என்றார்.
சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, நவம்பர் 10ஆம் தேதியை திப்பு சுல்தான் ஜெயந்தியாக கொண்டாடிவந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தங்கம் பதுக்குபவர்கள் கவனத்துக்கு - மத்திய அரசு அதிரடி திட்டம்