இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும், தேசியச் சோதனை நிறுவனம் வாயிலாக இந்தியப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளர், உதவிப் பேராசிரியர் பணிகளில் சேர்க்கை பெறுவதற்கான பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
மேலும் இந்த தேசிய தகுதித் தேர்வில் மொத்தம் 81 வகையான பாடப்பிரிவுகளில் தேர்வுகள் நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம், அதற்கான இணையான படிப்புகளில் பொதுப்பிரிவினர் 55 விழுக்காடு மதிப்பெண்களுக்கு குறையாமலும் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் 50 விழுக்காடு குறையாமலும் பெற்றிருக்க வேண்டும்.