கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அனைத்து அத்தியாவசியமற்ற கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதில் மதுப்பிரியர்களின் கூடாரமான மதுபான கடைகளும் பூட்டிக் கிடக்கின்றன.
இந்நிலையில் மது குடித்தால் தொண்டையில் உள்ள கரோனா அழியும் எனவே மதுக்கடைகளைத் திறக்க வேண்டும் என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பரத் சிங் அதிரடியாக கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், ”ஆல்கஹால் இருக்கும் சானிடைசரால் கை கழுவும்போது கைகளில் உள்ள வைரஸ் அழியும் என்றால், மது அருந்தினால்கூட தொண்டையில் உள்ள வைரஸ் நிச்சயமாக அழியும். எனவே மதுபான கடைகளைத் திறக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் கள்ளச்சாரயத்தை குடிப்பதால் இறப்பு அதிகமாகும், அதுமட்டுமின்றி அரசுக்கும் வருவாய் இழப்பும் ஏற்படும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:"நீங்க தர்லன்னா நாங்களே எடுப்போம்" - மதுப்பிரியர்கள் அட்டகாசம்!