தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாஸ்க் எதுக்கு என டிக்டாக்கில் நக்கலாகப் பதிவு... கரோனா வைரஸ் பாதித்தப் பின்பு டிக்டாக்கில் சோகப் பதிவு! - மாஸ்க் எதுக்கு என டிக்டாக்கில் நக்கலாக பதிவு

போபால்: சாகரில் டிக்டாக்கில் மாஸ்க் தேவையில்லை என்று நக்கலாகப் பதிவிட்டிருந்த நபருக்கு, கரோனா வைரஸ் தொற்று உறுதியாகி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

ே்ே
்ே்

By

Published : Apr 12, 2020, 6:16 PM IST

மத்தியப் பிரதேசத்தில், சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான இளைஞர் கரோனா வைரஸ் தொற்று உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், தனிமைப்படுத்தப்பட்ட வார்டிலிருந்து டிக்டாக் வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து புந்தேல்கண்ட் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் ஜி.எஸ். படேல் கூறுகையில், " இந்த இளைஞர் நாட்டில் கரோனா வைரஸ் பரவும் சமயத்தில் டிக்டாக் வீடியோ ஒன்று வெளியிட்டார். அதில், பைக்கில் அமர்ந்திருக்கும் இந்த இளைஞரிடம் அவ்வழியே சென்ற நபர் ஒருவர் மாஸ்க் அணியுங்கள் என தெரிவிப்பார். ஆனால், அதற்கு பதிலளித்த இளைஞர், எதற்கு ஒரு துணியை நம்பனும், கடவுள் மீது நம்பிக்கை வையுங்கள் எனக் கூறிக்கொண்டு, மாஸ்கை தூக்கிவீசி காற்றில் பறக்கவிடுவார்.

இந்நிலையில், சமீபத்தில் காய்ச்சல், இருமல் நோய் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது கரோனா வைரஸ் தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்றுவருகிறார். இவர், தனிமைப்படுத்தப்பட்டிருந்த வார்டிலிருந்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், அவர் மாஸ்க் அணிந்துகொண்டு, எனக்காக கடவுளிடம் பிராத்தணை செய்யுங்கள் என, சோகமாகக் கூறுகிறார். இதுகுறித்து புகார் வந்ததையடுத்து, அவரின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்றார். சாகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட முதல் நபர் இந்த இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கேரளாவில் பாதியாக குறைந்த குற்றங்கள்

ABOUT THE AUTHOR

...view details