தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டிக்டாக் தடை: ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும் மித்ரான் பதிவிறக்கம்! - டிக்டாக் தடை

பெங்களூரு: டிக்டாக் செயலி தடைசெய்யப்பட்டதையடுத்து, அதற்கான இந்திய மாற்று என்று விளம்பரப்படுத்தப்பட்ட மித்ரான் செயலியின் பதிவிறக்கம் 2.5 கோடியைத் தாண்டியுள்ளது.

TikTok
TikTok

By

Published : Jul 9, 2020, 7:33 PM IST

இந்தியாவின் இறையாண்மைக்கும் இந்தியர்களின் தனியுரிமைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி மத்திய அரசு டிக்டாக் உள்ளிட்ட 59 சீனச் செயலிகளுக்குத் தடைவிதித்தது. இந்தியாவில் டிக்டாக் தடை காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பப் பல செயலிகளும் கடுமையாக முயன்றுவருகின்றன. அதன்படி இன்ஸ்டாகிராம் ரீல் என்ற புதிய வசதியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

இருப்பினும், டிக்டாக் செயலியின் இந்திய மாற்று என்று விளம்பரப்படுத்தப்பட்ட மித்ரான் செயலியின் பதிவிறக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. ஆரம்பக் காலத்தில், தொழில்நுட்பக் கொள்கை மீறல் காரணமாக சில காலம் இந்த மித்ரான் செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள டெவலப்பர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த மித்ரான் செயலி தற்போதுவரை மட்டும் 40 லட்சம் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்தச் செயலியை வடிவமைத்தவர்களில் ஒருவரான சிவங்க் அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தற்போது நாள் ஒன்றுக்கு மித்ரான் செயலியில் 10 லட்சம் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. ஊரடங்கு காரணமாக அனைவரும் வீட்டில் அடைபட்டுக் கிடக்கும் இந்தக் காலகட்டத்தில் குறுகிய வீடியோக்கள் மூலம் பொதுமக்களுக்கு தேவையான டிஜிட்டல் பொழுதுபோக்கை வழங்குவதே எங்கள் நோக்கம்" என்றார்.

இதையும் படிங்க:டிஜிட்டலில் பணம் செலுத்துபவர்களா நீங்கள்? - சைபர் காப்பீடு பெறுவது எப்படினு தெரிஞ்சுக்கோங்க?

ABOUT THE AUTHOR

...view details