ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து காங்கிரஸ், பாஜக அவர்களது வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்தனர். நேற்று பாஜக, ஹரியானா மாநிலத்தில் போட்டியிடும் 12 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாவது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.
டிக் டாக் பிரபலத்திற்கு சீட் - பாஜகவின் பலே ராஜதந்திரம்! - சோனாலி போகட்
சண்டீகர்: ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட டிக் டாக் பிரபலம் சோனாலி போகட்டிற்கு பாஜக வாய்ப்பளித்துள்ளது.
இந்நிலையில் ஹரியானா மாநிலம் ஆதம்பூர் தொகுதியில் போட்டியிட டிக் டாக் பிரபலம் சோனாலி போகாட்டிற்கு பாஜக வாய்ப்பளித்துள்ளது. இவர் ஹரியானா மகிளா மோர்சா அமைப்பின் துணைத் தலைவராக இருந்து வருகிறார். சோனாலிக்கு வாய்ப்பளித்தது தொடர்பாக பலரும் வரவேற்றுள்ளனர். மேலும் சிலர் விமர்சித்தும் வருகின்றனர். இதனிடையே டிக் டாக் பிரபலம் சோனாலி போட்டியிடுவது, அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தைத் தூண்டியுள்ளது.
இதையும் படிங்க: 'முதலில் மோடி, இப்ப மனோகர் லால் கட்டர்' - மனம்தளராமல் போட்டியிடும் தேஜ் பகதூர்!