தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திகார் சிறையில் பணியாற்றும் உதவி கண்காணிப்பாளருக்கு கரோனா - உதவி கண்காணிப்பாளருக்கு கரோனா

டெல்லி: திகார் சிறையில் பணியாற்றும் உதவி கண்காணிப்பாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.

திகார் சிறையில் பணியாற்றும் உதவி கண்காணிப்பாளருக்கு கரோனா உறுதி
திகார் சிறையில் பணியாற்றும் உதவி கண்காணிப்பாளருக்கு கரோனா உறுதி

By

Published : May 25, 2020, 10:09 AM IST

திகார் சிறை எண் 7-ல் பணியாற்றிவரும் உதவி கண்காணிப்பாளர், சிறைச்சாலையில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் வசித்துவருகிறார். இந்நிலையில், அவர் தனது வீட்டிற்குச் சென்று குடும்பத்தினரை சந்திப்பதற்காக அவர் மே 22ஆம் தேதி விடுப்பு எடுத்தார்.

பின்னர், வீட்டிற்குச் செல்வதற்கு முன்னாள் அவர் மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்தார். அதன் முடிவுகள் மே 24ஆம் தேதி வந்த நிலையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவரை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும், சிறைச்சாலையில் அவருடன் தொடர்பில் இருந்த அலுவலர்களுக்கும் கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களையும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அவர் பணியாற்றிய எண் 7-ல் உள்ள ஐந்து சிறைக் கைதிகளையும் தனிமைப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா ஊரடங்கால் வாழ்விழந்த சுற்றுலா வழிகாட்டிகள்! வாழ்விற்கு வழிகாட்டுமா அரசு?

ABOUT THE AUTHOR

...view details