தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட்-19: திகார் சிறையிலிருந்து 400 கைதிகள் விடுவிப்பு

டெல்லி: கரோனா அச்சுறுத்தல் காரணமாக நெரிசலை குறைக்கும் வகையில் திகார் சிறையிலிருந்து 400 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Tihar
Tihar

By

Published : Mar 28, 2020, 10:37 PM IST

கரோனா வைரஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறையில் உள்ள நெரிசலை குறைக்கும் நோக்கில் 3,000 கைதிகள் பிணையில் விடுவிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, திகார் சிறையிலிருந்து 400 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மூத்த சிறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "356 கைதிகள் 45 நாள்களுக்கு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 63 கைதிகள் எட்டு வாரத்திற்கு அவசர பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், கடும் குற்றத்தில் ஈடுபட்ட கைதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள். ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்கவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறையில் உள்ள நெரிசை குறைக்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் குழுவை அமைத்து கைதிகளுக்கு பிணை வழங்குவது குறித்து ஆலோசனை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் மார்ச் 23ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: கிராமங்களை காப்பதே, நாட்டின் வெற்றி!

ABOUT THE AUTHOR

...view details