பிரதமர் நரேந்திர மோடிபல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கிவைக்க உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். அங்கு, பரேட் மைதானத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் மோடி 27 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கவுள்ளார்.
அதன் பின்னர், பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித்தொகைத் திட்டத்தின் முதலாமாண்டு விழா சித்தரகூட் பகுதியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் மோடி விவசாயிகளுக்கான நல உதவித்திட்டங்களை வழங்கவுள்ளார்.
பிரமரின் வருகையை ஒட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உச்சபட்ச கண்காணிப்பில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், டெல்லி வன்முறை பாதுகாப்புக் குறித்து கேள்விக்குறியை எழுப்பியுள்ளது.