தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அஸ்ஸாமில் புலி பற்களை வைத்திருந்த 4 பேர் கைது - வனவிலங்கு கடத்தல்

கவுகாத்தி: கர்பி அங்லாங் மாவட்டத்தில் புலி பற்களை வைத்திருந்ததாக நான்கு பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து 16 புலி பற்களையும் பறிமுதல் செய்தனர்.

Tiger teeth recovered from Assam, four nabbed
Tiger teeth recovered from Assam, four nabbed

By

Published : Oct 22, 2020, 6:28 AM IST

அஸ்ஸாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்திலுள்ள பிர்லா பகுதியில் சிலர் புலி பற்களை வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், புலி பற்களை வைத்திருந்ததாக நான்கு பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 16 புலி பற்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விலங்கு பாகங்கள் கடத்தும் கும்பல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:குடும்ப பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details