தானே (மகாராஷ்டிரா): மூன்றடுக்கு மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், 10 பேர் உயிரிழந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தானே கட்டட விபத்து: 10 பேர் உயிரிழந்ததாக தகவல்! - மும்பை கட்டட விபத்து
பிவாண்டியிலுள்ள பட்டேல் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மூன்று மாடிக் கட்டடம் பெருமழை காரணமாக இன்று(செப்.21) அதிகாலையில் இடிந்து விழுந்தது. அதில் சிக்கி இதுவரையில் 10 பேர் உயிரிழந்ததாக தானே மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![தானே கட்டட விபத்து: 10 பேர் உயிரிழந்ததாக தகவல்! building collapses in Thane](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8876520-640-8876520-1600652457790.jpg)
building collapses in Thane
பிவாண்டியிலுள்ள பட்டேல் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மூன்று மாடிக் கட்டடம் பெருமழை காரணமாக இன்று(செப்.21) அதிகாலையில் இடிந்து விழுந்தது. இவ்விபத்தில் இருந்து இதுவரையில் 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் 20க்கும் மேற்பட்டோரை தேசியப் பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். இவ்விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக மாநகராட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Last Updated : Sep 21, 2020, 9:27 AM IST