தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு- காஷ்மீரை குறிவைத்து தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் - பாகிஸ்தான்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணும் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியது.

pakistan-army
pakistan-army

By

Published : Nov 10, 2020, 6:01 PM IST

ஜம்மு-காஷ்மீரில் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து அத்துமீறித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல்களுக்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் எல்லையில் உள்ள கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தரப்பு துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழக்கின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று (நவம்பர் 11) துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக ராணுவ அலுவலர்கள் தெரிவித்தனர்.

இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டுவருகிறது. பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாப்பூர், கிர்னி, கஸ்பா ஆகிய பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக இந்திய ராணுவ அலுவலர்கள் தெரிவித்தனர். பாகிஸ்தான் அத்துமீறலுக்குப் பதிலடி கொடுக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு மட்டும், 3 ஆயிரத்து 200 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் சம்பவங்களில் ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் வாழும் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details