தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திய விமானப் படையிடம் மூன்று ரஃபேல் விமானங்கள் ஒப்படைப்பு - அமைச்சர் தகவல்

டெல்லி: மூன்று ரஃபேல் விமானங்களை இந்திய விமானப் படையிடம் பிரான்ஸ் ஒப்படைத்துள்ளதாக மக்களவையில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் ஸ்ரீபத் நாயக் கூறியுள்ளார்.

rafale jet

By

Published : Nov 21, 2019, 1:00 PM IST

ரஃபேல் விமானம் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்புத் துறை இணையமைச்சர் ஸ்ரீபத் நாயக்,

”பிரான்ஸின் டெசால்டு நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் விமானங்கள் வாங்குவதற்கு, 2016ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுடன் இந்தியா சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தம் மேற்கொண்டது.

இதையடுத்து, அக்டோபர் 8ஆம் தேதி பிரான்ஸில் உள்ள விமானப் படைத் தளத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முதல் ரஃபேல் விமானத்தை அதிகாரப்பூர்வமாகப் பெற்றுக்கொண்டார்.

இதையும் படிங்க : சாந்துப்பொட்டு, சந்தனப் பொட்டு - ரஃபேலுக்கு ஃபிரான்சில் ராஜ்நாத் சிங் பூஜை

அதேபோன்று, இதுவரை மூன்று ரஃபேல் விமானங்கள் இந்திய விமானப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த விமானங்களில் விமானப் படை வீரர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் பயிற்சி மேற்கொண்டுவருகின்றனர். முதற்கட்டமாக, வரும் மே மாதத்திற்குள் நான்கு ரஃபேல் போர் விமானங்கள் ஒப்படைக்கப்படவுள்ளன.

ரஃபேல் விமானங்கள் வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டதைவிட 2.86 விழுக்காடு குறைவான விலையில் விமானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன" என்றார்.


இதையும் வாசிங்க : ரஃபேல் விவகாரத்தில் பாஜகவுக்கு சிக்கல்! #RafaleDea
l

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details