சீனாவில் உருவான கொரோனா வைரஸ், அந்நாட்டிலும், இத்தாலியிலும் அதிகமான உயிரிழப்புகளை உருவாக்கியது. உலகம் முழுவதும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலர் பலியாகி வருவதோடு, பாதிக்கப்பட்டும் வருகின்றனர். உலக நாடுகள் அனைத்தும் இந்த வைரஸ் தொற்றுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் விமான நிலையத்தில் வைத்து தீவிரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே, நாட்டிற்குள் இந்திய அரசாங்கம் அனுமதிக்கிறது. இந்த நிலையில், புதுச்சேரி அரசு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க 200 தனிப் படுக்கையறைகளை மருத்துவமனையில் ஏற்பாடு செய்துள்ளது.