தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் தாகில்பள்ளியில் சீனிவாஸ் என்பவரது வீட்டின் சுவர் காலை இன்று எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் சீனிவாஸ், அவரது மனைவி லட்சுமி மற்றும் அவரது 11 வயது குழந்தை சாய் ஆகியோர் உயிரிழந்தனர்.
தெலங்கானாவில் சுவர் இடிந்து விழுந்து மூவர் உயிரிழப்பு! - Three people died wall collapsed
ஹைதராபாத்: நிஜாமாபாத் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
three-people-died-in-a-wall-collapsed
அவரது மூன்று மகள்கள் படுகாயங்களுடன் போதன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வீட்டில் அனைவரும் தூங்கிகொண்டிந்தபோது விபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க:ஆம்பன் புயலால் கனமழை; வீட்டின் சுவர் இடிந்து 3 மாத குழந்தை உயிரிழப்பு