உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவை அடுத்துள்ள நாக்லா கிஷன் லால் பகுதியைச் சேர்ந்தவர் ராம்வீர். மளிகைக் கடை தொழில் செய்துவந்த அவரும், அவரது மனைவி மீரா மற்றும் அவர்களது மகன் பாப்லூ (23) ஆகிய மூவரும் கடைக்கு அருகே வசித்து வந்தனர். வழக்கமாக, விடியற்காலையிலேயே கடையை திறக்கும் அவர், அன்று திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் ராம்வீர் வீட்டிற்குள் எட்டிப்பார்த்த போது மூவரும் சடலமாக கிடப்பதைக் கண்டுள்ளனர்.
அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலையறிந்த கூடுதல் காவல் தலைவர் அஜய் ஆனந்த், ஐஜி ஏ.சதீஷ் கணேஷ் மற்றும் மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் (எஸ்.எஸ்.பி) பாப்லூ குமார் ஆகியோர் தடயவியல் குழுவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர்.