தமிழ்நாட்டில் மேலும் மூவருக்கு கரோனா - Three More Positive Corona Cases Reported in TN
![தமிழ்நாட்டில் மேலும் மூவருக்கு கரோனா Corona](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6532340-thumbnail-3x2-corona.jpg)
21:40 March 24
தமிழ்நாட்டில் மேலும் மூவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நேற்று 15ஆக இருந்த எண்ணிக்கை இன்று 18ஆக உயர்ந்துள்ளது. நியூசிலாந்திலிருந்து திரும்பிய 65 வயது நபருக்கு கரோனா வைரஸ் நோய் பாதிக்கபட்டிருப்பதை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நியூசிலாந்திலிருந்து திரும்பிய 65 வயது நபர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த 55 வயது பெண் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். லண்டலிருந்து திரும்பிய 25 வயது நபர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அனைவரும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையானோர் வெளிநாட்டிற்குச் சென்று திரும்பியவர்களாவர். ஆனால், சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் வெளிநாட்டிற்குச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
TAGGED:
corona update in tamilnadu