டிசம்பர் மாதம் லாவேபோரா என்கவுன்ட்டரில் உயிரிழந்த மூன்று இளைஞர்களும் பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் பயங்கரவாதிகள் என்பதற்கான ஆதாரத்தை 10 நாள்களில் காவல் துறையினர் வெளியிடுவார்கள் என காஷ்மீர் ஐஜி விஜயகுமார் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், "இதுவரை 60 விழுக்காடு ஆதாரத்தை திரட்டியுள்ளோம். மீதமுள்ளவற்றை சில நாள்களில் வெளியிடுவோம். திரட்டிய ஆதாரத்தை அவர்களது பெற்றோர்களிடம் காண்பித்து அவர்களின் குழந்தைகள்தான் பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது நிரூபிக்கப்படும்" என்றார்.
"கரோனா தொற்று காரணமாக உயிரிழந்த இளைஞர்களின் உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த டிசம்பர் 30ஆம் தேதி அன்று உயிரிழந்த மூவரும் ஏஜாஸ் கனாய், சுபைர் லோன், அதர் முஷ்டாக் என்று தெரியவந்துள்ளது. எனினும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அவர்களது குழந்தைகள் நிரபராதிகள் என்றும் அவர்கள் எந்த பயங்கரவாத செயலிலும் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்தனர். அவர்களின் உடல்களை திரும்ப கொடுக்கவும் கோரிக்கை விடுத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க... பாகிஸ்தான் மற்றும் சீனா இணைந்தால் இந்தியாவுக்கு ஆபத்து-ராணுவத் தளபதி