ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா பகுதியில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்பில் இருப்பவர்கள், பயங்கரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி, இந்த சோதனை நடைபெற்றது.
இதில், முஜீப் ஷமாஸ், தன்வீர் அகமது, இம்தியாஸ் அகமது என்ற மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள், லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் பாகிஸ்தான் கொடிகளை ஏற்றி தேச விரோத எண்ணங்களை விதைக்க முயற்சித்ததாகவும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.