ஆந்திர- ஒடிசா எல்லைப்பகுதியின் அருகிலுள்ள சிங்காரம் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் முகாமிட்டதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்குப் பாதுகாப்புப் படையினர், ஒடிசா மாவட்ட சிறப்புக் காவல் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பாதுகாப்புப் படை நடத்திய என்கவுன்டரில் 3 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை - பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை
ஹைதராபாத்: ஆந்திர- ஒடிசா எல்லைப்பகுதியில் மாவோயிஸ்ட் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர்.
அப்போது பாதுகாப்புப் படையினரைக் கண்டதும் அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்கள் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பாதுகாப்புப் படையினரும், மாவட்ட சிறப்பு காவல் படையினரும் சரமாரியாகச் சுட்டனர். இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சூடு நடந்தது.
இந்தத் தாக்குதலில் ஒரு பெண் உள்பட இரண்டு மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர். இவர்களை ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட சிறப்பு காவல் படையினர் சுட்டுக்கொன்றனர். அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்துவருகிறது.