மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டம் விரார் நகரில் வசித்து வரும் ஹேமந்த் காரத், தனது வீட்டு மலக்குழியை சுத்தம் செய்ய நான்கு தொழிலாளர்களைப் பணியமர்த்தியுள்ளார். அவர்கள் மலக்குழிக்குள் இறங்கி சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் மூவர் உயிரிழந்தனர். ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரோனா சூழலில் மலக்குழி மரணம்: இந்தியாவில் தொடரும் அவலம்! - septic tank murders
மும்பை: பால்கர் மாவட்டத்தில் மலக்குழியைச் சுத்தம் செய்ய இறங்கியபோது விஷவாயு தாக்கியதில் தொழிலாளர்கள் மூவர் உயிரிழந்தனர்.
கரோனா சூழலில் மலக்குழி மரணம்: இந்தியாவில் தொடரும் அவலம்!
தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்காததாலும், பாதுகாப்பை உறுதி செய்யாததாலும் ஹேமந்த் காரத்தை போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவர்கள் நாரயணன் போயி, ஜெயந்திர முக்னே, தேஜஸ் பக்தே என்பது அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்த 20 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:விவசாய கடன் தள்ளுபடி குறித்து ஆர்.பி.ஐ. அறிவிப்புகளில் குறிப்பிடப்படவில்லை - கேரள நிதியமைச்சர்