இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இருப்பினும் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் எழுந்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் வகையில் வைரஸ் தொற்றால் சுகாதாரத் துறை பணியாளர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில், தற்போது மேற்கு வங்க தலைநகரிலுள்ள கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சையளித்த மூன்று மருத்துவர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அங்கிருந்த இரண்டு நோயாளிகளுக்கும் வைரஸ் பரவியுள்ளது தெரியவந்துள்ளது.