அதிதீவிர புயலான ஃபோனி, ஒடிசா மாநிலம் பூரி அருகே இன்று காலை கரையை கடக்க தொடங்கியது. காலை 8 மணிக்கு தொடங்கி 10 மணி அளவில் ஃபோனி புயல் முழுமையாக கரையைக் கடந்தது.
ஃபோனி புயல் 3 பேர் பலி! - பலி
புவனேஷ்வர்: ஃபோனி புயல் தாக்கத்தால் ஒடிசா மாநிலத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்தனர்.
ஃபோனி புயல் தாக்கம்
இந்நியையில், ஃபோனி புயல் தாக்கத்தால் ஒடிசா மாநிலத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்தனர். புயல் கரையைக் கடந்த பூரியில் மரம் ஒன்று சாய்ந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். நயாகர் (Nayagarh) மாவட்டத்தில் சூறை காற்றால் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியானார். கென்ட்ரபாரா (Kendrapara) மாவட்டத்தில் புயல் காரணமாக முகாமில் தஞ்சமடைந்திருந்த மூதாட்டி ஒருவர் மாரடைப்பால் காலமானார்.
Last Updated : May 3, 2019, 7:24 PM IST