மும்பையில் மருத்துவக்கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த மாணவி பாயல் தத்வி. பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த இவரை மூத்த மருத்துவர்கள் ராகிங் செய்தும், சாதி பெயரை சொல்லியும் கிண்டல் செய்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த மாணவி மே 22ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மாணவியை ராகிங் செய்த மூன்று பெண் மருத்துவர்களும் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகினர்.
மருத்துவ மாணவி தற்கொலை வழக்கில் திருப்பம் - 3 மருத்துவர்கள் கைது - தற்கொலை
மும்பை: மருத்துவ மாணவி தற்கொலை வழக்கில் மூன்று பெண் மருத்துவர்களை மும்பை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
3மருத்துவர்கள் கைது
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மூன்று பேரையும் தேடிவந்த நிலையில், ஹேமா அஹூஜா, அங்கிட்டா காண்டெல்வால், பக்தி மேக்ஹே ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.