Latest National News: லக்னோவிலிருந்து டெல்லி செல்லும் இரண்டடுக்கு விரைவு ரயில் இன்று காலை உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள கட்கர் - மொராதாபாத் ரயில் நிலையங்களுக்கிடையே சென்று கொண்டிருந்த போது தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து காலை 10 மணியளவில் நடந்ததாகவும் இரண்டு ரயில் பெட்டிகள் மட்டுமே (ரயில் பெட்டிகள் 5,8) தடம் புரண்டுள்ளதாகவும் வடக்கு ரயில்வே துறைச் செய்தி தொடர்பாளர் தீபக் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும், அவர்கள் தடம்புரண்ட பெட்டிகளுக்கு முன் உள்ள பெட்டிகளுக்குப் பத்திரமாக அழைத்து செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தடம் புரண்டது லக்னோ-டெல்லி விரைவு ரயில் வாரம் நான்கு நாட்கள் இயக்கப்படும் இந்த விரைவு ரயில் தினமும் காலை 5 மணிக்கு லக்னோ ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காங்கிரஸ் தலைவர்களுடன் ஷேக் ஹசீனா சந்திப்பு