தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜக பிரமுகர் மர்மமான முறையில் உயிரிழப்பு - மேற்கு வங்கத்தில் பரபரப்பு! - மேற்கு வாங்கம்

மேற்கு வங்கத்தில் பாஜக பிரமுகர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

File pic

By

Published : May 12, 2019, 9:45 AM IST

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், ஆறாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. பிகார், உத்தரப்பிரதேசம் உட்பட ஏழு மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.

பிகார் 8, மேற்கு வங்கம் 8, டெல்லி 7, ஹரியானா 10, ஜார்க்கண்ட் 4, மத்தியப் பிரதேசம் 8, உத்தரப் பிரதேசம் 14 தொகுதிகள் என மொத்தம் 59 மக்களவைத் தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் மாவட்டத்தில் பாஜக பிரமுகர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளர். இதனையடுத்து அப்பகுதி பதற்றம் நிறைந்ததாக காணப்படுகிறது.

இதேபோல் பகபந்த்பூர், மெதினிபூரில் பாஜக பிரமுகர்கள் இரண்டு பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details