2021-22ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குடியரசு தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மாநிலங்களவையில் இன்று நடைபெற்றது.
அப்போது ஆம் ஆத்மி கட்சியின் மூன்று உறுப்பினர்கள் வேளாண்சட்டங்களுக்கு எதிராகவும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்த அம்மூவரையும் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்தார்.