பிரெஞ்சு தயாரிப்பு நிறுவனமான டசால்ட் ஏவியேஷனிடமிருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் விமானங்களை வாங்கும் நோக்கில் இந்தியா 2016ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஐந்து ரஃபேல் விமானங்கள் ஹரியானா மாநிலம் அம்பாலா வந்தடைந்தது.
இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் உள்ள ரஃபேல் விமான தளத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை திட்டமிட்டது ஜலந்தர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ் வைஷ்யா என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.