தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களை நிறுவியவர் நேரு - ராகுல் காந்தி புகழாரம் - ராகுல் காந்தி புகழாரம்

தொலைநோக்கு பார்வை கொண்ட நேரு, உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களை நிறுவினார் என ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

By

Published : May 27, 2020, 1:19 PM IST

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் 56ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சுதந்திர போராட்ட வீரரான நேரு, மேற்கத்திய கல்வி அமைப்பின் மீது ஈர்ப்பு கொண்ட காரணத்தால், நாட்டில் அறிவியல் படிப்பை அடுத்த தரத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் ஐஐடிகளை நிறுவினார். இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜவஹர்லால் நேரு துணிச்சல் மிக்க சுதந்திர போராட்ட வீரர். நாட்டின் முதல் பிரதமரான அவர் நவீன இந்தியாவை கட்டமைத்தார்.

தொலைநோக்கு பார்வை கொண்ட நேரு, காலம் கடந்து நிற்கும் உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களை நிறுவினார். இந்தியாவின் தவப்புதல்வனுக்கு அஞ்சலி செலுத்திக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நேருவின் 56ஆவது நினைவு நாள்: பிரதமர் மோடி அஞ்சலி

ABOUT THE AUTHOR

...view details