தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உண்மையை மிரட்ட முடியாது- பாஜகவிற்கு சவால் விடுக்கும் காங்கிரஸ் - பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி:ராஜிவ் காந்தி அறக்கட்டளை மற்றும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகியவற்றின் சட்ட மீறல்கள் குறித்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் குழு அமைத்தது குறித்து, உண்மையை ஒருபோதும் "மிரட்ட முடியாது" என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உண்மையை மிரட்ட முடியாது- பாஜகவிற்கு சவால் விடுக்கும் காங்கிரஸ்
உண்மையை மிரட்ட முடியாது- பாஜகவிற்கு சவால் விடுக்கும் காங்கிரஸ்

By

Published : Jul 9, 2020, 3:36 AM IST

இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள ராகுல் காந்தி, "பிரதமர் நரேந்திர மோடி, உலகம் அவரைப் போலவே இருப்பதாக நம்புகிறார், அனைவருக்கும் ஒரு விலை இருப்பதாக அவர் நினைக்கிறார்.

சத்தியத்திற்காக போராடுவோருக்கு விலை இல்லை, அவர்களை எதைக்கொண்டும் மிரட்ட முடியாது என்பதை மோடி ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டார்" என்று தெரிவித்துள்ளார்.

பயமடைந்த மோடி அரசு, கோழைத்தனமான செயல்களால் இந்திய தேசிய காங்கிரசையும், அதன் தலைமையும் அச்சுறுத்த முடியாது என்று காங்கிரஸ் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

"வெளிநாட்டு மூலங்கள், தனிநபர்கள், நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் அரசாங்கங்கள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களிலிருந்தும் நன்கொடைகள் மற்றும் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) பெற்ற தொகைகள் குறித்து மோடி அரசு விசாரணை நடத்துமா?" என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பாஜகவின் நயவஞ்சகமான வெறுப்பு அரசியல் ஒவ்வொரு நாளும் சங்கடமான, வெறுக்கத்தக்க முறையில் வெளிப்படுகிறது என்று ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

இந்தத் தொண்டு நிறுவனங்கள் வழங்கும் மனிதாபிமானப் பணிகள் மற்றும் சிறப்பான சேவை எப்போதுமே தனித்து நிற்கின்றன, எந்தவொரு பழிவாங்கும் விசாரணையையும் எதிர்கொள்ளும் என்று காங்கிரஸ் அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைமையின் சீன தொடர்புகள், சீன நிறுவனங்களால் பிரதமரின் நிதிக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகள் மற்றும் சீனத்திற்கு சொந்தமான வணிகங்களை தொடர்ந்து ஊக்குவிப்பது குறித்த கேள்விகள் காங்கிரஸ் தரப்பில் இருந்து தொடர்ந்து கேட்கப்பட்டு வருவதால் பாஜக அச்சம் அடைந்துள்ளது என்று சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பண மழையில் ஆர்எஸ்எஸ் அமைப்பு: கேள்வி கேட்கும் காங்கிரஸ்

ABOUT THE AUTHOR

...view details