கர்நாடகா மாநிலம் பெங்களூரு பதாராயணபுரத்தில் நேற்று (ஏப்ரல் 19) இரவு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை இடமாற்றம் செய்வது தொடர்பாக அப்பகுதியில் சிலர் சுகாதாரத்துறை அலுவலர்களிடம் வன்முறையில் ஈடுபட்டனர். அதையடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்து வன்முறையை தடுத்துநிறுத்தினர்.
சட்டத்தை மீறுபவர்களை கடுமையாக கையாள வேண்டும்: முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி
பெங்களூரு: கரோனா கட்டுப்பாடுகளில் சட்டத்தை மீறுபவர்களை கடுமையாக கையாள வேண்டும் என்று கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எச்.டி. குமாரசாமி தெரிவித்துள்ளார்.
Those who break law must be dealt with strictly: Former CM HD Kumaraswamy
அதுகுறித்து அம்மாநில முன்னாள் முதலமைச்சர் எச்.டி. குமாரசாமி கூறுகையில், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கத்தக்கவை அல்ல, ஒவ்வொருவரும் கட்டாயம் அரசின் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெங்களூரில் காவலரைத் தாக்கிய இளைஞர்கள்... 144 தடையை மீறியதில் தகராறு!