விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் பல்வேறுவிதமான நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது. இருந்தபோதிலும் தனிப்பட்ட மனிதர்களின் பங்கு இம்மாதிரியான விவகாரங்களில் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டிறைச்சி வியாபாரி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
அறிவிப்பு
ஐந்து கிலோ மட்டன் வாங்கினால் ஐஎஸ்ஐ தரச்சான்றிதழ் பெற்ற தலைக்கவசம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், ஆட்டிறைச்சி வாங்க வீட்டிலிருந்து ஸ்டீல் பாத்திரங்களை எடுத்துவந்தால் 20 ரூபாய் தள்ளுபடி அளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்டுக்கறி வாங்கினால் தலக்கவசம் இலவசம் பிப்ரவரி 22ஆம் தேதிவரை இந்தச் சலுகை அளிக்கப்படும் எனவும் அதற்குப் பிறகு 100 வாடிக்கையாளர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆம்புலன்ஸ் வராததால் மகாராஷ்டிராவில் நிகழ்ந்த அவலம்!