வயநாடு மாவட்டம், கல்பேட்டா பகுதியைச் சேர்ந்தவர் கல்பனா. ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான இவர், தன்னுடைய ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக மாற்ற நினைத்து பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
அதன்படி, சமையலுக்குப் பயன்படும் வெங்காயம், பூண்டு இவற்றின் தோலை பயன்படுத்தி ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளார். கலையில் அதிக ஆர்வமுடைய இவர், பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் முழு நேரமாக ஓவியங்கள் வரைவதையே தற்போது செய்துவருகிறார்.