உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பேருந்து சேவை வழங்குவதில் அரசியல் செய்வதை நிறுத்திவிட்டு அவர்களின் நலனுக்காக பணியாற்ற வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலத்திலிருந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கரோனா லாக்டவுன் காரணமாக சொந்த ஊருக்கு படையெடுத்துவருகின்றனர். அவர்களுக்கு அரசு முறையான போக்குவரத்து வசதி மேற்கொள்ளாமல் எல்லையில் தடுத்துநிறுத்திவரும் நிலையில், காங்கிரஸ் கட்சி இவ்விவகாரத்தில் தலையிட்டது.
காங்கிரஸ் கட்சி சார்பில் உத்தரப் பிரதேச தொழிலாளர்களுக்காக 1,000 பேருந்துகள் அனுப்பவதாக பிரியங்கா காந்தி அறிவித்தார். அந்த பேருந்தை ஏற்பதில் உத்தரப் பிரதேச அரசுக்கும் பிரியங்காவுக்கும் மோதல் நிலவிவரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து காணொலி மூலம் பிரியங்கா கோரிக்கைவிடுத்துள்ளார்.
லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உணவின்றி, உறைவிடம் இன்றி சாலைகளில் நடக்கும் அவலத்தை கருத்தில் கொள்ளாமல், இவ்விவகாரத்தில் பாஜக அரசியல் செய்வது தவறானது எனவும் கட்சி பாகுபாடின்றி காங்கிரஸின் உதவியை ஏற்குமாறும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:லாக்டவுன் 4.0: கட்டுப்பாடுகளை நாங்கள் கூர்ந்து கவனிக்கிறோம் - உள்துறை அமைச்சகம்