6ஆவது சர்வதேச யோகா தினத்தையொட்டி இன்று காலை காணொலி மூலம் மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, "மனித சமூகத்தில் ஒற்றுமையையும் தோழமையையும் வளர்க்கும் சக்தியாக யோகா உருவெடுத்துள்ளது. இனம், நிறம், பாலினம், மதம், தேசங்களைக் கடந்து அனைவருக்கும் சொந்தமானது இது. ஆரோக்கியமான, மகிழ்ச்சியான சமூகமாக நாம் மாற யோகா உறுதுணையாக இருக்கும்.
சுவாச மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளப் பிராணாயாமம் மூச்சுப் பயிற்சி செய்வதே சிறந்த வழி. ஒரே சமூகமாக, குடும்பமாக ஒற்றுமையுடன் பயணிப்போம். யோகாவை வாழ்க்கையின் ஒரு அங்கமாக்கிக் கொள்ளுங்கள்" என்றார்.