பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்கள் அசைவ உணவை சமைத்து அண்டைவீட்டாருக்கும், ஏழைகளுக்கும் பகிர்ந்தளித்து உண்ணுவர். இந்த தியாகத் திருநாளையொட்டி சந்தைகளில் ஆடுகளின் வியாபாரம் அமோக நடைபெறும். அதுபோல், கர்நாடகா மாநிலம் பெல்லாரி ஆட்டுச்சந்தையில் ஒரு ரூசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
80,000 ரூபாய்க்கு கேட்ட ஆடு ஒன்றை அதன் உரிமையாளர் கொடுக்க மறுத்துள்ளார். இதுகுறித்து நமது ஈடிவி பாரத் நிருபர் அந்த ஆட்டின் உரிமையாளரிடம் கேட்டபோது, "ஜாமன்பூரி, ராஜஸ்தான் கலப்பினத்தைச் சேர்ந்த இந்த ஆடு 110 கிலோ எடையுள்ளது.