பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி வழக்கின் இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று வழங்கியது. பல வருடங்களாக நடைபெற்றுவந்த இந்த வழக்கில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்றும், இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக்கொள்ள ஐந்து ஏக்கர் மாற்று நிலம் வழங்கப்படும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை வெளிட்டுள்ளார். அதில், "அயோத்தி வழக்குத் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டும் சமூக நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டும் சமரச முயற்சியின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பாகவே அமைந்துள்ளது.’சமரச முயற்சியின் அடிப்படையில் அயோத்தி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது’ - திருமாவளவன் - ayodhya judgement
அயோத்தி வழக்கின் தீர்ப்பு சமூக நல்லிணக்கத்தை கருத்தில்கொண்டு சமரச முயற்சியின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பாக அமைந்துள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
thirumavalavan opinion about ayodthya verdict
நாட்டின் நலன் கருதி, சமூக அமைதியின் தேவை கருதி அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:அயோத்தி தீர்ப்பு: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கருத்து!