17ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் கூட்டத்தொடர் என்பதால் புதிய எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் நேற்று பதவியேற்ற நிலையில், இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 38 எம்.பி.க்களும் தமிழில் பதவியேற்றுக் கொண்டனர்.
‘வாழ்க அம்பேத்கர்... பெரியார்!’ - மக்களவையில் முழங்கிய திருமா - பெரியார்
டெல்லி: மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட சிதம்பரம் தொகுதி எம்.பி. திருமாவளவன், ‘வாழ்க அம்பேத்கர் பெரியார், வெல்க ஜனநாயகம் சமத்துவம்’ என முழங்கினார்.
![‘வாழ்க அம்பேத்கர்... பெரியார்!’ - மக்களவையில் முழங்கிய திருமா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3592914-555-3592914-1560855250423.jpg)
Thirumavalavan
ஒவ்வொருவரும் பதிவியேற்கும்போது தங்கள் சித்தாத்தங்கள், தலைவர்களைப் போற்றி உறுதிமொழியை நிறைவு செய்தனர். இதில் பதிவியேற்க வந்த சிதம்பரம் தொகுதி எம்.பி தொல்.திருமாவளவன், ‘வாழ்க அம்பேத்கர் பெரியார், வெல்க ஜனநாயகம் சமத்துவம்’ என உறுதிமொழியை நிறைவு செய்து பதவியேற்றுக் கொண்டார்.