தமிழ்நாடு

tamil nadu

நிர்பயா வழக்கு: 3ஆவது முறையாகக் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு

டெல்லி : நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் நால்வருள் ஒருவரான அக்சய தாகூர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பியுள்ளார்.

By

Published : Feb 1, 2020, 3:24 PM IST

Published : Feb 1, 2020, 3:24 PM IST

Nirbhaya convict, நிர்பயா குற்றவாளி
Nirbhaya convict

2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் தாகூர் ஆகிய நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோர் தங்களைத் தூங்கிலிட வேண்டாம் எனத் தனித்தனியாகக் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளித்திருந்தனர். அவை நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது மற்றொரு குற்றவாளியான அக்சய் தாகூர் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியுள்ளார்.

முன்னதாக, பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் இன்று காலை 6 மணிக்கு நிறைவேற்றப்படவிருந்த மரண தண்டனை தற்காலிமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நிர்பயா வழக்கு: வினய் சர்மாவின் கருணை மனு நிராகரிப்பு

ABOUT THE AUTHOR

...view details