தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹிரியானா கல்லூரி மாணவி சுட்டுக்கொலை: மூன்றாவது குற்றவாளி கைது! - ஹிரியானா மாணவி கொலை வழக்கில் மூன்றாவது நபர் கைது

சண்டிகர்: பட்டப்பகலில் கல்லூரி வாசலில் மாணவியை சுட்டுக்கொன்ற வழக்கில் மூன்றாவது குற்றவாளியை காவல் துறையினர் கைது செய்தனர்.

har
har

By

Published : Oct 29, 2020, 12:59 PM IST

ஹிரியானாவின் பரிதாபாத் மாவட்டத்துக்கு உட்பட்ட பல்லப்கர் என்ற பகுதியில் உள்ள கல்லூரியிலிருந்து ஒரு பெண் தேர்வு எழுதிட்டு வெளியே வந்தார். அப்போது ஒரு காரில் வந்த 2 பேர் அம்மாணவியை காரில் கடத்த முயன்றனர். உடனடியாக சுதாரித்த மாணவி, அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றார்.

இதில் ஆத்திரமடைந்த அவர்கள் மாணவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பினர். சம்பவ இடத்தில் உயிருக்குப் போராடிய மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இந்தநிலையில், இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மாணவிக்கு முன்பே தெரிந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அவர்களில் ஒருவர், மாணவியை பல மாதங்களாக தொந்தரவு செய்து வந்துள்ளார். இதையடுத்து, களத்தில் இறங்கிய காவல் துறையினர், முக்கிய குற்றவாளிகளான குருகிராமில் வசிக்கும் தவுசிப், நுஹில் வசிக்கும் ரெஹான் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இந்நிலையில், இச்சம்பவத்தின் மூன்றாவது குற்றவாளியான நுஹ் மாவட்டத்தைச் சேர்ந்த அர்ஜூ என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அர்ஜூ தான் தவுசிப்புக்கு துப்பாக்கி வழங்கியதும் உறுதியாகியது. பிடிபட்ட அர்ஜூவிடம் காவல் துறையினர் தீவிர விசாரணையை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details