ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தை அடுத்த எஸ்.என்.கந்திரிகா கிராமத்தில் வசிக்கும் பாலகிருஷ்ணா (50) என்பவர், உடல் பரிசோதனைக்காக திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வர ராம்நாரயண் ருயா அரசு பொது மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு வாயில் தொற்று நோய் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதை அவர் வீட்டில் உள்ள நபர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவரது குடும்ப உறுப்பினர்கள் 'வாயில் தொற்று நோய் வந்ததற்கு கொரோனா வைரஸ் தான் காரணம்' எனக் கூறி, பாலகிருஷ்ணாவை தொடாமல் இருந்துள்ளனர். இதனால் கவலையடைந்த அவர் தனது விவசாய நிலத்தில் உள்ள மரத்தில், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த பாலகிருஷ்ணாவின் உறவினர்கள், அவரது உடலை எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்தனர்.